Ticker

6/recent/ticker-posts

கிங் ஆஃப் கொத்தா விமர்சனம்- ஆக்‌ஷன் ஹீரோவாக துல்கர் சல்மான்

 

                                    


                                            அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கிங் ஆஃப் கொத்தா. இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் உடன் ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.


 

                                                   கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவான இப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது

 


 

துல்கர் சல்மானின் ஒன்மேன் ஷோ தான் கிங் ஆஃப் கொத்தா. வழக்கமான யூகிக்கக்கூடிய கதைக்களமாக இருந்தாலும் மேக்கிங் அருமையாக உள்ளது. வில்லன் கேரக்டர் பலவீனமாக உள்ளதால் அது திரைக்கதையிலும் பிரதிபலித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இன்னும் நன்றாக எடுத்திருந்தால் படம் அருமையாக இருந்திருக்கும்

          படத்தில் பின்னணி இசையால் சில காட்சிகள் உயிர்பெற்றுள்ளன. மற்றபடி,அனைத்தும் சுமார் தான். அதே பழைய டெம்பிளேட், நான் ஸ்டாப் கிரிஞ் டயலாக் எல்லாம் இணைந்து ஒரு ஆவரேஜான படத்தை கொடுத்துள்ளன.

Post a Comment

0 Comments